Wednesday, April 22, 2015

மின்னும் மரணம் வெளயீட்டு விழா - 19th April 2015

சென்னை புத்தக திருவிழா நடக்கும் மைதானத்திற்கு 10.30 வந்தடைந்தேன். அதற்கு முன் பல நண்பர்கள் அங்கே இருந்தார்கள், இரண்டு குழுக்களாக; மரத்தடியில் சொக்கலிங்கம் பன்னீர் செல்வம், வினோஜ், மாயாவி சிவா, முருகன், குற்றச்சகரவர்த்தி; அருகே பந்தலடியில் இருந்த குழுவில், விஜய், புனித சாத்தான், ஜானி, ரவி கண்ணன், திருப்பூர் நாகராஜ், டெக்ஸ் விஜயராகவன், ராஜ் முத்துக்குமார், டெக்ஸ் கிட், திருப்பூர் நாகராஜ், சம்பத் மற்றும் பல ஈரோடு, சேலம் நண்பர்கள் இருந்தார்கள். 

ஜானி நீங்கள் உங்கள் மகனிடம் செய்து கொண்ட ஒப்பந்தபடி ஞாயிறு மாலை காஞ்சனா-2 பார்க்க போய் இருப்பீங்க என நம்புகிறேன்!

இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம், நானும் (ராஜ்) முத்துக்குமார் இருவரும் ஒன்றாக ஒரே காலேஜில் MCA படித்தவர்கள்; அவரை 7 வருடம்களுக்கு முன் சந்தித்தேன்; மிக நீண்ட இடைவேளைக்கு பின் இங்கு சந்திக்க முடித்தது சந்தோசமாக இருந்தது. 

நான் முதலில் வினோஜ் குழுவை சந்தித்தேன், ஏன் என்றால் அவர்களை இருவரை சந்தித்து இல்லை (ஈரோடு புத்தக திருவிழாவில் ஜஸ்ட் மிஸ்), என்னை அறிமுகம்படுத்தி கொண்டு பேசிக்கொண்டு இருந்தோம். தீடீர் என ஒரு கார் புத்தக திருவிழா நுழைவாயில் அருகே வந்து நின்றது, நண்பர்கள் அனைவரும் ஆசிரியர் வந்து விட்டார் என கூறி கொண்டே காரை சுற்றி கொண்டுவிட்டார்கள். 

நான் ஆசிரியர் குடும்பத்தை தற்போது தொந்தரவு செய்ய வேண்டாம், சிறிது நேரம் கழித்து பார்க்கலாம் என மரத்தடியில் மற்ற நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தேன். ஆனால் ஆசிரியர் எங்களை கவனித்தவுடன் நேராக எங்களிடம் வந்து பேச ஆரம்பித்து விட்டார். 

இதுவரை நடந்த காமிக்ஸ் நண்பர்கள் சந்திப்புகளில் நான் கவனித்து, நண்பர்கள் ஆங்காங்கே தனி தனி குழுவாக/நபர்களாக இருந்தாலும், ஆசிரியர் தானே சென்று அவர்களை பற்றி விசாரித்து செல்வது வழக்கம். ஆசிரியரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். 

எங்கள் அனைவரையும் பற்றி விசாரித்து விட்டு அவருடன் சேர்ந்து அருகே இருந்த பந்தலடியில் அனைவரும் சென்று அமர்ந்தோம். நண்பர்கள் அனைவரும் ஆசிரியர் குடும்பத்தை சூழ்ந்து கொண்டு கேள்விகளும் போட்டோகளுமாக வந்து விழுந்தன. 

11 மணி ஆனவுடன் அனைவரும் புத்தக அரங்கத்தினுள் ஆசிரியர் குடும்பத்துடன் நுழைந்தோம்! அங்கே இருந்த ஒரு சிறிய அரங்கத்தில் அனைவரும் அமர்தோம். 

புத்தக வெள்யீடு பற்றிய போட்டோ மற்றும் வீடியோ தொடர்பான URL (Address) நாளை இங்கு update செய்கிறேன்.

Saturday, August 2, 2014

ஈரோடு புத்தக திருவிழா விஜயம்

நமது "சிங்கத்தின்" 30வது ஆண்டு மலர்  ஈரோடு புத்தக திருவிழாவில் இன்று காலையில் வெளிஈடப்பட்டது, நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் சந்திக்க முடிந்தது, குறிப்பாக ஈரோடு சுத்துப்பட்டியில் உள்ள அனைத்து காமிக்ஸ் நண்பர்களை; அவர்களில் காமிக்ஸ் காதலுக்கு ஒரு "Royal Salute". மகிழ்ச்சியான மறக்க முடியாத நாள் இந்த நாள். காலை 11.45 மணிக்கு நமது ஸ்டாலில் நுழைந்த எனக்கு அடுத்த நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை,  பெங்களூர் திரும்ப சேலத்தில் பஸ் ஏறிய பின் மனதில் தோன்றிய இனம் புரியாத மகிழ்ச்சி, அதற்கு காரணம் நமது காமிக்ஸ் என்ற பிணைப்புதான் என்றால் அது மிகையில்லை. 

நமது எடிட்டர் அவர்கள் வழக்கமாக புன்முறுவலுடன் நமது அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்; கேள்வியில் அதிகமாக பலரால் கேட்கப்பட்டது நமது மூம்மூர்த்திகளை பற்றித்தான் :-)

நமது காமிக்ஸ் நண்பர்கள் பிரசன்னா, சங்கர், மாயாவி சிவா, ஈரோடு ஸ்டாலின், ஈரோடு விஜய், சேலம் டெக்ஸ் விஜயராகவன், டெக்ஸ் சம்பத், புனித சாத்தான், செந்தில் மாதேஷ், பழனிவேல், கிங் விஸ்வா, அஹ்மத், ரபிக் ராஜா, ஸ்டீல் (பொன்ராஜ்), ரவி கண்ணன், சாரதி, ராஜா, ஷால்லும், ஸ்ரீதர்,  வெங்கடேஷ், தாரமங்கலம் பரணிதரன், மற்றும் சுசீந்தரன் இவர்களை சந்திக்க இந்த விழா ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது.







நமது ஸ்டாலுக்கு வருகை புரிந்த நண்பர்களை நமது ஆசிரியர் வருக வருக என வரவேற்றார் அதே போல் நண்பர்கள் அனைவரும் திருப்பி செல்லும் போது ஆசிரியரிடம் சொல்லிவிட்டு சென்றது, நமது வீட்டு விசேங்களை நினைவுபடுத்தியது. நான் மற்ற ஸ்டால் சென்று விட்டு அரை மணி நேரம் கழித்து நமது ஸ்டால் வந்தால் நமது ஆசிரியர் உணவு அருந்த சென்று விட்டார், எனவே அவரிடம் சொல்லமலே பெங்களூர் திரும்பி நேரிட்டது :-(

நண்பர்களுடன் நமது ஆசிரியர் பேசிக்கொண்டு இருந்த போது இரண்டு நண்பர்கள் (அதில் ஒருவர் அஜய் சாமி என நினைக்கிறன்) சார் ஒரு நிமிடம் இன்று சொல்லிவிட்டு சில நிமிடம்களில் இரண்டு குளிர்பானம்களுடன் வந்து நமது ஆசிரியர் மற்றும் விக்ரம் அவர்களை குடித்து விட்டு பேச சொன்னார்கள்.. அவர்களின் கனிவு பிடித்து இருந்தது. 

அஜய் சாமி மற்றும் வினோஜ் போன்ற நண்பர்கள் சாயலில் இரண்டு நண்பர்களை பார்த்தேன், அவர்களிடம் சிறிது நேரம் கழித்து பேசலாம் என இருந்தேன் ஆனால் அதற்குள் அவர்கள் சென்று விட்டார்கள். பிரான்ஸ் வாசகர் ராஜாவை சுற்றி நண்பர்கள் கூட்டம், அவர் தனது L.M.S புத்தகத்தை பெற்று கொண்டு அவசரமாக கிளம்பி கொண்டு இருந்ததால் அவரிடமும் பேச முடியவில்லை :-(

நமது காமிக்ஸ் தளத்தில் பதிவிடாமல் தொடர்ந்து படித்துவரும் மவுன பார்வையாளர்கள் பலரை சந்திக்க நமது புத்தக ஸ்டாலில் முடிந்தது, அவர்கள் சொல்லும் காரணம், "என்ன சார் இந்த மாதிரி சண்டை போடுறாங்க, வெட்டு குத்து நடக்குது, நமக்கு எதுக்கு வம்பு அதனால எதுவும் நம்ப தளத்தில் பதிவு இடுவதில்லை" என சொன்ன போது மனது வருத்தபட்டது. அவர்களிடன் நீங்கள் அதை பற்றி கவலைபடாமல் உங்கள் மனதில் உள்ளதை எழுதி விட்டு செல்லுங்கள்; இது நமது காமிக்ஸ் தொடர்ந்து சிறப்பாக வெளி வர உதவும் என்றேன்.

கடந்த இரண்டு வருடம்களாக செல்ல முடியாத ஈரோடு புத்தக திருவிழாவிற்கு இந்த முறை செல்ல, வாய்பு ஏற்படுத்தி தந்த எனது குடும்பத்திற்கு நன்றி :-). 

Thursday, July 24, 2014

நாம் மாறி வருகிறோம்

பெங்களூர்: கடந்த சில மாதம்களுக்கு முன் காலையில் எனது அலுவலகம் செல்லும் போது  ITPL அருகே உள்ள ஹூடி சந்திப்பில் உள்ள சிக்னலில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. நான் செல்லும் திசையில் மிக பெரிய வரிசையில் வாகனங்கள் இருந்தன. அதே திசையில் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளி ஒருவரை அவசரமாக மருத்துவமனை எடுத்து செல்ல வழக்கம் போல் சத்தம் இட்டு கொண்டு இருந்தது.

நானும் வழக்கம் போல் பாவம்டா இந்த நோயாளி இந்த மக்கள் என்னிக்கி வழிவிட்டு இவரை எப்படி காப்பாத்த போன்றனுகளோன்னு நொந்து கொண்டு நின்றேன்.

ஆம்புலன்ஸ் முன்னால் இருந்த வாகனகள் தீடிர் என சிக்னல் விளக்கு பச்சைக்கு மாறுவதற்குள் அவைகள் வேகமாக நகர ஆரம்பித்தன, சரி மக்கள் ஆம்புலன்ஸ் பேர சொல்லி வழக்கம் போல் சிக்னல் ஜம்ப் பண்ண போறாங்க அப்படின்னு நினைத்தால் எல்லா வாகனம்களும் முன்னால் சென்று ஒரு ஓரமாக நின்று கொண்டு ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்டு நின்றன! சக வாகனம்களின் இந்த செயலால் ஆம்புலன்ஸ் அந்த சிக்னலை விரைத்து கடந்து சென்றது.

பெங்களூர்-ல் பொதுவாக ஆம்புலன்ஸ்/தீ அணைப்பு வண்டி போன்றவை அவசரமாக செல்ல வேண்டும் என்றால் சக வாகன  ஓட்டிகள் அதனை கண்டு கொள்ளவதில்லை, அதில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் நோயாளிகளை ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை; தான் விரைந்து செல்வது தான் முக்கியம் என நான் புரிந்து கொண்ட விஷயம். ஆனால் இந்த சம்பவம் உயிர்க்கு நமது மக்கள் மதிப்பு கொடுக்க ஆரம்பித்து விட்டதை பறைசாற்றியது. என்னை பொறுத்தவரை இது போன்ற மாற்றம்கள் நமது நாட்டிற்கு கண்டிப்பாக தேவை.

இந்த நிகழ்வு என்னை அறியாமல் கைதட்டி அந்த வாகன ஓட்டிகளை பாராட்டிய போது கண்களில் ததும்பிய ஆனந்த கண்ணீரை மறைக்க முடியவில்லை. 

Tuesday, November 26, 2013

இரண்டாம் குழந்தை

இரண்டாம் குழந்தை பிறந்த பின் முதல் குழந்தையின் மனம் கஷ்டபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என பல முறை உறுதி எடுத்தும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் முதல் குழந்தை மனம் சில நேரம் கஷ்டபட்ட தருணம்கள் இதனை எழுத தூண்டியது. 
  • இதுவரை முன் இருக்கையில் இருந்த முதல் குழந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது தாய் தந்தை இருவருக்கும் இது பொருந்தும்; தாயின் பங்கு அதிகம்.
  • முதல் குழத்தையின் செல்ல பெயர்களை கூறி இரண்டாம் குழந்தை அழைக்கபட்டது, அப்படி அழைக்கும் போது முதல் குழந்தை நம்மைத்தான் அழைகிறார்கள் என ஏமாந்த நிகழ்வுகள் அதிகம் :-(
  • புதிய செல்ல பெயர்கள் இரண்டாம் குழந்தைக்கு உருவான போது முதல் குழந்தைக்கும் புதிய பெயர்கள் (கோபத்தில் திட்டுவதுக்கு) இடப்பட்டன :-(
  • முதல் குழந்தையின் சுட்டி தனத்தை ரசித்த தாய் தந்தை இரண்டாம் குழந்தையின் ஓவ்வொரு அசைவை ரசிப்பது.
  • இரண்டாம்  குழந்தையுடன் தாய் செலவிட்ட நேரம் அதிகம்,  முதல் குழந்தை தாய்காக காத்திருந்து தனது வேலையை தானே செய்ய பழகியது.
  • இரண்டாம் குழந்தையை கொஞ்சும் தாயை ஏக்கத்துடன் பார்த்த முதல் குழந்தை; இதுவரை கேட்காமல் தன்னை கொஞ்சி குலாவிய தாயை தன்னை கொஞ்சும் படி கேட்ட முதல் குழந்தை. 
  • தாய் சில நேரம் தன்னிடம் செலவிட்ட தருணம்களை தந்தை மற்றும் வீட்டில் உள்ள அனைவரிடமும் சிகிலாதித்து பேசும் முதல் குழந்தையின் தாய் பாசம்.

தாய் தந்தை இரண்டாம் குழந்தை உடன் பிரியமாக இருப்பதை கண்டு தானும் அன்புடன் இருக்க கற்று கொண்டு சகோதரன்/சகோதரியுடன் தனது சந்தோசம்களை பகிர தயாராகி ஏற்று கொள்ளும் முதல் குழந்தையின் பிஞ்சு மனம் (இதுதான் இயற்கையா).

Wednesday, July 31, 2013

மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை ????

நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து வீடு சென்று கொண்டு இருந்த போது "டமால்" என்ற சத்தத்தை தொடர்ந்து "கீரிச்" என பிரேக் பிடிக்கும் சத்தம் கேட்டு, ஒரு விநாடி அதிர்த்த நான் எனது எதிர்புற சாலையில் ஒரு உருவம் அசைவற்று கிடக்க அவரின் தலை பஸ்-ன் பின் சக்கரத்திக்கு வெகு அருகில் இருப்பதை கண்டு மிரண்டு போனேன். நான் எனது 2 சக்கர வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அந்த நபருக்கு உதவி செய்ய ஓடினேன். அதற்குள் 10-20 நபர்கள் கீழே கிடந்த நபரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்று கொண்டு இருந்தார்கள், ஒரு நபர் நெஞ்சை அமுக்கி சுவாசம் கொடுத்து கொண்டு இருந்தார்........ நெஞ்சம் தட தடக்க அனைவரும் அந்த நபரை பார்த்து கொண்டு இருந்தார்கள் ..... சுமார் 5 நிமிடம் கழித்து விபத்தில் சிக்கிய நபர் கண் திறந்தார் ... அனைவரும் அவரவர் சொந்த மொழிகளில் சந்தோஷ ஆரவாரம் செய்தனர்  கை கால்களில் சிராய்புகள் தவிர வேறு பெரிய சேதாரம் ஏதும் இல்லை

ஒரு சிலர் அந்த நபரிடம் யோகம் அதிகம் இல்லேன்னா தலை போய் இருக்கும் ... நல்ல நேரம்...ஆண்டவன் உன் பக்கம்..... என கூறிய போது எனது உள் மனதில் இவர்களின் மனிதாபிமானம் தான் அவரை காப்பற்றியது என ஒலித்து கொண்டே இருந்தது இரவு முழுவதும்.

கடந்த பல வருடமாக சாலையில் செல்லும் போது இது போன்ற விபத்துகளில் யாரும் உதவி செய்து பார்த்தது இல்லை, அவரவர் வேலையை பார்பதில் மும்முரமாக இருந்ததை கண்டு வேதனை அடைந்து இருக்கிறேன்.... இன்றைய சம்பவம் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என எனக்கு உணர்த்தியது.

-Parani S
Bangalore
31-07-2013