Wednesday, July 31, 2013

மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை ????

நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து வீடு சென்று கொண்டு இருந்த போது "டமால்" என்ற சத்தத்தை தொடர்ந்து "கீரிச்" என பிரேக் பிடிக்கும் சத்தம் கேட்டு, ஒரு விநாடி அதிர்த்த நான் எனது எதிர்புற சாலையில் ஒரு உருவம் அசைவற்று கிடக்க அவரின் தலை பஸ்-ன் பின் சக்கரத்திக்கு வெகு அருகில் இருப்பதை கண்டு மிரண்டு போனேன். நான் எனது 2 சக்கர வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அந்த நபருக்கு உதவி செய்ய ஓடினேன். அதற்குள் 10-20 நபர்கள் கீழே கிடந்த நபரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்று கொண்டு இருந்தார்கள், ஒரு நபர் நெஞ்சை அமுக்கி சுவாசம் கொடுத்து கொண்டு இருந்தார்........ நெஞ்சம் தட தடக்க அனைவரும் அந்த நபரை பார்த்து கொண்டு இருந்தார்கள் ..... சுமார் 5 நிமிடம் கழித்து விபத்தில் சிக்கிய நபர் கண் திறந்தார் ... அனைவரும் அவரவர் சொந்த மொழிகளில் சந்தோஷ ஆரவாரம் செய்தனர்  கை கால்களில் சிராய்புகள் தவிர வேறு பெரிய சேதாரம் ஏதும் இல்லை

ஒரு சிலர் அந்த நபரிடம் யோகம் அதிகம் இல்லேன்னா தலை போய் இருக்கும் ... நல்ல நேரம்...ஆண்டவன் உன் பக்கம்..... என கூறிய போது எனது உள் மனதில் இவர்களின் மனிதாபிமானம் தான் அவரை காப்பற்றியது என ஒலித்து கொண்டே இருந்தது இரவு முழுவதும்.

கடந்த பல வருடமாக சாலையில் செல்லும் போது இது போன்ற விபத்துகளில் யாரும் உதவி செய்து பார்த்தது இல்லை, அவரவர் வேலையை பார்பதில் மும்முரமாக இருந்ததை கண்டு வேதனை அடைந்து இருக்கிறேன்.... இன்றைய சம்பவம் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என எனக்கு உணர்த்தியது.

-Parani S
Bangalore
31-07-2013