Tuesday, November 26, 2013

இரண்டாம் குழந்தை

இரண்டாம் குழந்தை பிறந்த பின் முதல் குழந்தையின் மனம் கஷ்டபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என பல முறை உறுதி எடுத்தும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் முதல் குழந்தை மனம் சில நேரம் கஷ்டபட்ட தருணம்கள் இதனை எழுத தூண்டியது. 
  • இதுவரை முன் இருக்கையில் இருந்த முதல் குழந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது தாய் தந்தை இருவருக்கும் இது பொருந்தும்; தாயின் பங்கு அதிகம்.
  • முதல் குழத்தையின் செல்ல பெயர்களை கூறி இரண்டாம் குழந்தை அழைக்கபட்டது, அப்படி அழைக்கும் போது முதல் குழந்தை நம்மைத்தான் அழைகிறார்கள் என ஏமாந்த நிகழ்வுகள் அதிகம் :-(
  • புதிய செல்ல பெயர்கள் இரண்டாம் குழந்தைக்கு உருவான போது முதல் குழந்தைக்கும் புதிய பெயர்கள் (கோபத்தில் திட்டுவதுக்கு) இடப்பட்டன :-(
  • முதல் குழந்தையின் சுட்டி தனத்தை ரசித்த தாய் தந்தை இரண்டாம் குழந்தையின் ஓவ்வொரு அசைவை ரசிப்பது.
  • இரண்டாம்  குழந்தையுடன் தாய் செலவிட்ட நேரம் அதிகம்,  முதல் குழந்தை தாய்காக காத்திருந்து தனது வேலையை தானே செய்ய பழகியது.
  • இரண்டாம் குழந்தையை கொஞ்சும் தாயை ஏக்கத்துடன் பார்த்த முதல் குழந்தை; இதுவரை கேட்காமல் தன்னை கொஞ்சி குலாவிய தாயை தன்னை கொஞ்சும் படி கேட்ட முதல் குழந்தை. 
  • தாய் சில நேரம் தன்னிடம் செலவிட்ட தருணம்களை தந்தை மற்றும் வீட்டில் உள்ள அனைவரிடமும் சிகிலாதித்து பேசும் முதல் குழந்தையின் தாய் பாசம்.

தாய் தந்தை இரண்டாம் குழந்தை உடன் பிரியமாக இருப்பதை கண்டு தானும் அன்புடன் இருக்க கற்று கொண்டு சகோதரன்/சகோதரியுடன் தனது சந்தோசம்களை பகிர தயாராகி ஏற்று கொள்ளும் முதல் குழந்தையின் பிஞ்சு மனம் (இதுதான் இயற்கையா).

Wednesday, July 31, 2013

மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை ????

நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து வீடு சென்று கொண்டு இருந்த போது "டமால்" என்ற சத்தத்தை தொடர்ந்து "கீரிச்" என பிரேக் பிடிக்கும் சத்தம் கேட்டு, ஒரு விநாடி அதிர்த்த நான் எனது எதிர்புற சாலையில் ஒரு உருவம் அசைவற்று கிடக்க அவரின் தலை பஸ்-ன் பின் சக்கரத்திக்கு வெகு அருகில் இருப்பதை கண்டு மிரண்டு போனேன். நான் எனது 2 சக்கர வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அந்த நபருக்கு உதவி செய்ய ஓடினேன். அதற்குள் 10-20 நபர்கள் கீழே கிடந்த நபரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்று கொண்டு இருந்தார்கள், ஒரு நபர் நெஞ்சை அமுக்கி சுவாசம் கொடுத்து கொண்டு இருந்தார்........ நெஞ்சம் தட தடக்க அனைவரும் அந்த நபரை பார்த்து கொண்டு இருந்தார்கள் ..... சுமார் 5 நிமிடம் கழித்து விபத்தில் சிக்கிய நபர் கண் திறந்தார் ... அனைவரும் அவரவர் சொந்த மொழிகளில் சந்தோஷ ஆரவாரம் செய்தனர்  கை கால்களில் சிராய்புகள் தவிர வேறு பெரிய சேதாரம் ஏதும் இல்லை

ஒரு சிலர் அந்த நபரிடம் யோகம் அதிகம் இல்லேன்னா தலை போய் இருக்கும் ... நல்ல நேரம்...ஆண்டவன் உன் பக்கம்..... என கூறிய போது எனது உள் மனதில் இவர்களின் மனிதாபிமானம் தான் அவரை காப்பற்றியது என ஒலித்து கொண்டே இருந்தது இரவு முழுவதும்.

கடந்த பல வருடமாக சாலையில் செல்லும் போது இது போன்ற விபத்துகளில் யாரும் உதவி செய்து பார்த்தது இல்லை, அவரவர் வேலையை பார்பதில் மும்முரமாக இருந்ததை கண்டு வேதனை அடைந்து இருக்கிறேன்.... இன்றைய சம்பவம் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என எனக்கு உணர்த்தியது.

-Parani S
Bangalore
31-07-2013