Sunday, December 11, 2016

நானும் லயன் & முத்து காமிக்ஸும்

நமது முத்து மற்றும் லயன் காமிக்ஸ் சிறுவயதில் இருந்து படித்து வந்தாலும்கல்லூரி படிப்பை முடித்துவிட்டு  பெங்களூரில் வேலை செய்ய ஆரம்பித்த போது நடந்த சிலவிசயம்கள் இன்றும் மறக்க முடியாது.

பெங்களூரில் நமது புத்தகம் KR மார்க்கெட் பகுதியில் கிடைக்கும், அது நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர். வாரவாரம் சனிக்கிழமை  KR மார்க்கெட் சென்று நமது புத்தகம் வருகிறதா என பார்த்து வாங்கி வருவேன், அப்போது எல்லாம் நமது புத்தகம் மாதமாதம் கிடைப்பது இல்லை; பல நாட்கள் மனதில் சோகத்துடன் & வெறும்கையுடன் வீடு திரும்புவேன்!

பின்னர் ஒருநாள் நமது காமிக்ஸ் அலுவலகத்திற்கு போஸ்ட் கார்டில் எழுதி எனது காமிக்ஸ் காதல் மற்றும் எனது காமிக்ஸ்வெறியை எழுதி இருந்தேன்; மேலும் பெங்களூரில் எங்கு நமது காமிக்ஸ் agent போன் நம்பர் தேவை என எழுதி இருந்தேன், என் பொல்லாத நேரம் முகவரி தவறு என்று அந்த போஸ்ட் கார்டு எனக்கு திரும்பி வந்துவிட்டது. என்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் என்னிடம் அந்த போஸ்ட் படித்து முக்கியமாக காமிக்ஸ்வெறியன் என்று எழுதியதை படித்து விழுந்து விழுந்து சிரித்து கிண்டல் பண்ணிய நாட்களை மறக்க முடியாது (இத படித்துவிட்டு இன்னும் இங்கு எத்தனை பேர் கிளம்பபோறாங்களோ J).


ஒருவழியாக பெங்களூரில் உள்ள காமிக்ஸ் agent போன் (land line number and to cell phones are not popular at that time) நம்பர் கிடைத்தது, அவரிடம் தொடர்பு கொண்டு நமது புத்தகம்கள் தேவை என்றவுடன் அவர் நமது காமிக்ஸ் தொடர்ந்துவராத காரணத்தினால் நமது காமிக்ஸை தற்போது வாங்குவது இல்லை எனவும், தன்னிடம் விற்பனை ஆகாமல் சில புத்தகம்கள் இருப்தாக சொன்னார், நான் அவைகளை வாங்கிகொள்கிறேன் என்று சொல்லி அவரை சிவாஜி நகரில் சனிக்கிழமை மதியம் 3மணி சந்திப்போம் என்று சொல்லிவிட்டேன். இன்று cell phones இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் உள்ள எனக்கு (நமக்கு) முன் பின் தெரியாத இருவர் cell phones அதிகம் உபயோகம் இல்லாத காலத்தில் சந்தித்து புத்தகத்தை வாங்கி கொண்ட விஷயம் இன்றும் எனக்கு மிக பெரிய ஆச்சரியம்.