- புத்தக விழா அரங்கத்தில் நுழைவதற்கு முன்பே, விஜயராகவன், கண்ணன், சுசீந்தரன், கணேஷ் குமார் போன்ற நண்பர்களை சந்தித்து விட்டேன்.
- அரங்கத்தில் நுழைவதற்கு முன்பே சிவாவை சந்தித்து விட்டேன்.
- காலையில் அரங்கத்தில் நுழைந்த போது மணி 10.15, சுமார் 10 பேர் இருந்தார்கள். அவர்கள் பிரசன்னா, எழுத்தாளர் திரு. சொக்கன், திருப்பூர் நாகராஜன், செந்தில் சத்யா, கரூர் குணா, கரூர் சரவணன், மகேந்திரன் பரமசிவம், நல்ல பிசாசு (சோமசுந்தரம்)
- திரு. சொக்கன் அவர்களுடன் பேசினேன், மிக பெரிய எழுத்தாளர் மிகவும் எளிதாக பழகினார்.
- சிறிது நேரத்தில் ஆசிரியர் உள்ளே நுழைந்து அனைவரிடம் குசலம் விசாரித்தார்.
- அடுத்து சில நேரத்தில் அரங்கம் நிரம்பி வழிய ஆரம்பித்தது; இந்த நேரத்தில் மேலும் பல புதிய மற்றும் பழைய நண்பர்களை சந்தித்து நலம் விசாரித்து கொண்டேன்.
- நிகழ்சிகள் ஆரம்பித்தவுடன் ஆசிரியர் மற்றும் நண்பர்கள் பேசுவதை video recording செய்ய ஆரம்பித்து விட்டேன்; இதனால் என்னால் மேலும் பல நண்பர்களை சந்தித்து பேசமுடியவில்லை என்பது வேறு விஷயம்.
- கலந்துரையாடல் நடந்து கொண்டு இருந்த போதே, காபி, வடை, முறுக்கு, பிஸ்கட், கம்மர்கட்டு, சுத்தி வைத்து உடைக்க முடியாத உருண்டை (ரடிஜா அடிக்க வராதிங்க), பால்கோவா,... எல்லா பலகாரமும் கிடைத்தது. திருமண விழாக்களில் கூட இது போன்று கொடுப்பது இல்லை. வாழ்க காமிக்ஸ் காதல்.
- இளையர்கள் அதிகம் வந்து இருந்தார்கள். அவர்கள் பேச்சில் புரிந்து கொண்டது, ஆசிரியர் தற்போது செல்லும் பாதை சரியானது. அவர்கள் புதிதாக நிறைய கதைகள் எதிர்பார்கிறார்கள். இன்றைய இளையர்களை கவர புதிய மற்றும் வித்தியாசமான கதைகள் தேவை; அதற்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும், அதே நேரம் அவை விற்பனையில் வெற்றி பெற வேண்டும்.
- ஒரு நண்பர் காமிக்ஸ் என்று எழுதி கொடுத்தால் போதும் படிப்பேன் என்றார் (என்னை போன்றவர்)
- இன்னும் ஒரு நண்பர் சாப்பிடும்போது தனக்கு காமிக்ஸ் கண்டிப்பாக தேவை என்று குறிபிட்டார்.
- இளையர் ஒருவர் தனக்கு காமிக்ஸ் அறிமுகம் ஆனது தனது ஓவிய ஆசிரியர் மூலம் என்று தனது ஆசிரியரை பற்றி பெருமை போங்க பேசினார். கண்ணா நீயும் ஓவியம் வரைவதாக சொன்னாய், அதனை நமது ஆசிரியருக்கு அனுப்பலாமே? நமது புத்தகம்களில் வாசகர் கைவண்ணம் என்று அவர் அதனை பிரசுரிக்க செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
- மற்றும் ஒரு நண்பரோ, காமிக்சை அவருக்கு அறிமுகபடுத்தி வைத்தது தனது தந்தை எனவும். ஒவ்வொரு மாதமும் காமிக்ஸ் வருவது தனது இறந்து போன தந்தையை காமிக்ஸ் வடிவில் பார்ப்பது போலவும் சொன்னது மனதை வருடியது.
- கிடைத்த சிறு இடைவெளியில் ஏற்கனவே அறிமுகமான சம்பத், சங்கர், வினோஜ், விஜய், ரம்யா, சாரதி மற்றும் அவரது நண்பர்கள், கலீல், சத்யா, அறிவரசு (ரவி), ஷாலும், மற்றும் புதிய நண்பர்கள் சிவா, இமானுவேல், திருநாவுக்கரசு, சரவணகுமார், ஜகதீஷ், சரவணன், ரடிஜா இன்னும் இரண்டு அயல்நாட்டு நண்பர்களை சந்தித்து பேசினேன்.
- நண்பர் ரடிஜா எனக்கு, பிரான்ஸ் மொழியில் உள்ள இரண்டு தோர்கல் புத்தகம்களை கொடுத்து தனது அன்பை வெளிபடுத்தினார். மீண்டும் ஒருமுறை நன்றி.
- ராஜசேகர் வந்து இருந்த அனைவர்க்கும், ஒரு சிறிய பாக்கெட்டில் கடலை, தேன், கம்மர் கட்டு மிட்டாய் மற்றும் கொஞ்சம் கார சேவு என்று பார்சல் செய்து கொடுத்து இருந்தார். இது விலை மதிப்பு இல்லாதது. உங்கள் காமிக்ஸ் நேசம் சிலிர்க்க செய்கிறது.
- சிவா மற்றும் இம்மானுவேல் என்ற நண்பர்கள் டெக்ஸ் படம் போட்ட T-Shirt பல நண்பர்களுக்கு கொடுத்து தங்களின் காமிக்ஸ் காதலை வெளிபடுத்தினார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் முதல் முறையாக இந்த சந்திப்பு வருகிறார்கள், காமிக்ஸ் பல வருடமாக படிகிறார்கள், நமது ப்ளாக் ரெகுலராக வரும் மௌன பார்வையாளர்கள். சார் இதனை பேர் வருவார்கள் என தெரியாது சார், தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள் சார்; அடுத்த முறை இன்னும் அதிகம் தயார் செய்து அனைவர்க்கும் கொடுப்போம் என்பது கண்களில் நீரை வர வளைத்து; அவர்களின் இந்த எண்ணம் மிகவும் பாராட்டுக்குரியது.
- மாலை நேரத்தில் ஈரோடு நண்பர்களுடன் டீ குடித்து மனம் விட்டு பேசியது.
- மாலை நேரத்தில் ஆசிரியரிடம் மரத்தடி உரையாடல், வழக்கம் போல் அவர் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததை video recording செய்து கொண்டு இருந்தேன்
- ரடிஜா பிரான்ஸ் சென்று செட்டிலான கதையை (வரலாறு?) கேட்டு ரசித்தேன்.
- மகேந்திரன் (மகி), இது போன்று நண்பர்கள் சந்திப்பு அடுத்து எனக்கு கிடைக்குமா என தெரியவில்லை; அதனால் இந்த முறை இதனை நழுவ விடாமல் கலந்து கொண்டேன். மிகவும் சந்தோஷபட்டார். மிகவும் எளிமையான நண்பர்.
- இரவு கலீல், சிவா, மகேந்திரன். ரடிஜா போன்ற நண்பர்களுடன் ஜூனியர் குப்பனாவில் உணவு அருந்தியது. என்ன பில்ல ஜாஸ்தி போட்டுடாங்க. மகேந்திரன் நன்றி எங்களுக்கு விருந்து கொடுத்ததற்கு.
- சிவா வழகம் போல் கடமை வீரன் கந்தசாமியாக வலம் வந்தார். அவருடன் இரவு 10.45 USB Card Reader வாங்க கடை கடையாக ஏறி இறங்கிய பின் விடை கொடுத்து பெங்களூர் கிளம்பினேன்.
அனைத்து தரப்பு நண்பர்களும் மிகவும் பணிவுடம், அன்புடன்
பேசினார்கள். இந்த பந்தம் என்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment