சுமார் கால்நூற்றாண்டுகள்
கழித்து நண்பர்களை சந்திக்க போகிறோம் என்பதில் மனதுக்குள் இனம் புரியா சந்தோசம்!
காலை சரியாக திட்டமிட்ட படி நண்பர்கள் அனைவரும் நமது காமராஜ் கல்லூரி வாசலில்
சந்தித்தோம். எனக்கு முன்னரே ரமேஷ், கிறிஸ்டோபர், சாம், நவனீ, பாலா காத்து கொண்டு
இருந்தார்கள்! மந்திரமூர்த்தியும் எங்களுடன் சேர்ந்த பின் கல்லூரியில் நுழைந்தோம்!
உள்ளே செல்வதற்கு
முன், ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து, நாம் படிக்கும் நாட்களில் ஒருவரை ஒருவர்
காலைவாரும் அதே தொழிலை செய்துவிட்டு, பழைய அதே பந்தத்துடன் இருப்பதை அறிய
முடிந்தது! குறிப்பாக கடந்த 25 வருடம்களின் யாரிடமும் எந்த மன மாற்றமும் இல்லை.
படிக்கும் காலத்தில் இருந்த அதே நட்புறவு இபோதும் காண முடிந்தது!
இப்ப கல்லூரிக்குள் செல்வோம்: சுற்றி இருந்த
மாணவர்கள் கூட்டம் இந்த வயதான இளைஞர் கூட்டத்தை ஒரு வித ஆச்சரியத்டன் பார்த்தது! மாணவர்களை
விட மாணவிகள் கூட்டம் அதிகமாகபட்டது. மாணவிகள் படிப்பதில் ஆர்வம் காட்டுவதை இது
உணர்த்தியது!
நாம படித்த வகுப்பறை இருந்த
கட்டடம்களை கண்டுபிடிப்பது சிரமம்மாக இருந்தது, ஏனா நிறைய மாற்றம்கள் நமது
கல்லூரியில். நமது வகுப்பறை அருகில் இருந்த மரம் அப்படியே இருந்தது, அதனை
பார்க்கும் போது பழைய “நாய்” காமெடி எனக்கு வந்த போது சிரிப்பை அடக்க முடியவில்லை!
நமது H.O.D எங்கள் அனைவரையும் லைப்ரரி அருகே உள்ள செமினார்
அறைக்கு எங்களை வர சொல்லி இருந்தார். ஒருவழியாக செமினார் அறையை கண்டுபிடித்து
சரியாக 11 மணிக்கும் உள்ளே நுழைந்தோம். இங்கே ஒரு விஷத்தை கவனிக்கவும், நாங்கள்
அனைவரும் சொன்ன நேரத்திற்கு கல்லூரி வாசலில் சந்தித்து சொன்ன நேரத்திற்கு செமினார்
அறைக்குள் நுழைத்தோம். அன்று சந்தித்த நண்பர்கள் அனைவரையும் காண இருந்த ஆவல்தான்
இந்த நேரம் தவறாமைக்கும் காரணம் என புரிந்து கொள்ள முடிந்தது.
செமினார் அறைக்குள் செல்லும் முன்: முத்துக்குமார்
கடைசி வரை வருவேன் என சொல்லிவிட்டு வராமல் இருந்தது வருத்தமான விஷயம். பிரின்ஸ்
தூத்துக்குடியில் இருந்தும் சில பல தனிப்பட்ட காரணம்களால் வரவில்லை.
அருப்புக்கோட்டை சரவணன் வழக்கம் போல் நம்மை விட்டு விலகி இருந்தது அவன் இன்னும்
மாறவில்லை என்பதை உணர்த்தியது, இத்தனைக்கும் அவன் நமது கல்லூரியில்தான் வேலை
செய்கிறான், அவனிடம் H.O.D நமது சந்திப்பை பற்றி சொல்லியும் அவன் வரவில்லை.
செமினார் அறைக்குள்: எங்களை கண்டவுடன் நமது H.O.D இன்முகத்டன் வரவேற்றார். உள்ளே ஒரே சத்தம்...
மாணவர்கள் கூட்டம் ஆவலுடன் எங்களை காண ... கண்டவுடன் ஒரே அமைதி.
தொடரும்....
முதல் முறையாக எங்களின் உரையை கேட்க நமது ஆசிரியர்கள் திரு.ஜோசப்ராஜ் மற்றும் திரு.ரவி
நமது கல்லூரி முதல்வர்
நவநீதன் மற்றும் மந்திரமூர்த்தி
கிறிஸ்டோபர்
T.பாலா
பாலா
எங்களின் சிறிய நினைவு பரிசு எங்களின் ஆசிரியர்களுக்கு
ஆசிரியர்களுடன் ஒரு casual உரையாடல்
இரெண்டு நாட்கள் கல்லூரி நண்பர்களுடன் பாலாற்றில் கொட்டம் அடித்த நினைவுகளை சொல்லும் படங்கள்:
பாலருவி குளியல்
தண்ணீரில் விளையாடும் எனது மகள்
நண்பர் T .பாலா மற்றும் ரமேஷ்குமாரின் மகன்களுடன் எனது மகள்
பாலருவியின் மலை அடிவாரம், இதற்கு அருகில்தான் தங்கி இருந்தோம்
T.பாலா மற்றும் சாம் அருகில் ரமேஷின் மகன்
நீரோடை, குழந்தைகள் இந்த இடத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டனர்
T.பாலாவின் முதல் குற்றால விஜயம்
ரமேஷ், T.பாலா மற்றும் சாம், உடன் உள்ளது T.பாலாவின் குட்டி சுட்டி - குற்றாலம் மெயின் அருவியில்
முதல் முறையாக எங்களின் உரையை கேட்க நமது ஆசிரியர்கள் திரு.ஜோசப்ராஜ் மற்றும் திரு.ரவி
நமது கல்லூரி முதல்வர்
திரு ஜோசப்ராஜ் அவர்கள்
நவநீதன் மற்றும் மந்திரமூர்த்தி
கிறிஸ்டோபர்
T.பாலா
பாலா
எங்களின் சிறிய நினைவு பரிசு எங்களின் ஆசிரியர்களுக்கு
ஆசிரியர்களுடன் ஒரு casual உரையாடல்
இரெண்டு நாட்கள் கல்லூரி நண்பர்களுடன் பாலாற்றில் கொட்டம் அடித்த நினைவுகளை சொல்லும் படங்கள்:
பாலருவி குளியல்
தண்ணீரில் விளையாடும் எனது மகள்
நண்பர் T .பாலா மற்றும் ரமேஷ்குமாரின் மகன்களுடன் எனது மகள்
பாலருவியின் மலை அடிவாரம், இதற்கு அருகில்தான் தங்கி இருந்தோம்
T.பாலா மற்றும் சாம் அருகில் ரமேஷின் மகன்
நீரோடை, குழந்தைகள் இந்த இடத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டனர்
T.பாலாவின் முதல் குற்றால விஜயம்
ரமேஷ், T.பாலா மற்றும் சாம், உடன் உள்ளது T.பாலாவின் குட்டி சுட்டி - குற்றாலம் மெயின் அருவியில்
Nice pictures and nice to see u all
ReplyDeleteThanks for visiting your college with kids
ReplyDelete