Saturday, August 2, 2014

ஈரோடு புத்தக திருவிழா விஜயம்

நமது "சிங்கத்தின்" 30வது ஆண்டு மலர்  ஈரோடு புத்தக திருவிழாவில் இன்று காலையில் வெளிஈடப்பட்டது, நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் சந்திக்க முடிந்தது, குறிப்பாக ஈரோடு சுத்துப்பட்டியில் உள்ள அனைத்து காமிக்ஸ் நண்பர்களை; அவர்களில் காமிக்ஸ் காதலுக்கு ஒரு "Royal Salute". மகிழ்ச்சியான மறக்க முடியாத நாள் இந்த நாள். காலை 11.45 மணிக்கு நமது ஸ்டாலில் நுழைந்த எனக்கு அடுத்த நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை,  பெங்களூர் திரும்ப சேலத்தில் பஸ் ஏறிய பின் மனதில் தோன்றிய இனம் புரியாத மகிழ்ச்சி, அதற்கு காரணம் நமது காமிக்ஸ் என்ற பிணைப்புதான் என்றால் அது மிகையில்லை. 

நமது எடிட்டர் அவர்கள் வழக்கமாக புன்முறுவலுடன் நமது அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்; கேள்வியில் அதிகமாக பலரால் கேட்கப்பட்டது நமது மூம்மூர்த்திகளை பற்றித்தான் :-)

நமது காமிக்ஸ் நண்பர்கள் பிரசன்னா, சங்கர், மாயாவி சிவா, ஈரோடு ஸ்டாலின், ஈரோடு விஜய், சேலம் டெக்ஸ் விஜயராகவன், டெக்ஸ் சம்பத், புனித சாத்தான், செந்தில் மாதேஷ், பழனிவேல், கிங் விஸ்வா, அஹ்மத், ரபிக் ராஜா, ஸ்டீல் (பொன்ராஜ்), ரவி கண்ணன், சாரதி, ராஜா, ஷால்லும், ஸ்ரீதர்,  வெங்கடேஷ், தாரமங்கலம் பரணிதரன், மற்றும் சுசீந்தரன் இவர்களை சந்திக்க இந்த விழா ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது.







நமது ஸ்டாலுக்கு வருகை புரிந்த நண்பர்களை நமது ஆசிரியர் வருக வருக என வரவேற்றார் அதே போல் நண்பர்கள் அனைவரும் திருப்பி செல்லும் போது ஆசிரியரிடம் சொல்லிவிட்டு சென்றது, நமது வீட்டு விசேங்களை நினைவுபடுத்தியது. நான் மற்ற ஸ்டால் சென்று விட்டு அரை மணி நேரம் கழித்து நமது ஸ்டால் வந்தால் நமது ஆசிரியர் உணவு அருந்த சென்று விட்டார், எனவே அவரிடம் சொல்லமலே பெங்களூர் திரும்பி நேரிட்டது :-(

நண்பர்களுடன் நமது ஆசிரியர் பேசிக்கொண்டு இருந்த போது இரண்டு நண்பர்கள் (அதில் ஒருவர் அஜய் சாமி என நினைக்கிறன்) சார் ஒரு நிமிடம் இன்று சொல்லிவிட்டு சில நிமிடம்களில் இரண்டு குளிர்பானம்களுடன் வந்து நமது ஆசிரியர் மற்றும் விக்ரம் அவர்களை குடித்து விட்டு பேச சொன்னார்கள்.. அவர்களின் கனிவு பிடித்து இருந்தது. 

அஜய் சாமி மற்றும் வினோஜ் போன்ற நண்பர்கள் சாயலில் இரண்டு நண்பர்களை பார்த்தேன், அவர்களிடம் சிறிது நேரம் கழித்து பேசலாம் என இருந்தேன் ஆனால் அதற்குள் அவர்கள் சென்று விட்டார்கள். பிரான்ஸ் வாசகர் ராஜாவை சுற்றி நண்பர்கள் கூட்டம், அவர் தனது L.M.S புத்தகத்தை பெற்று கொண்டு அவசரமாக கிளம்பி கொண்டு இருந்ததால் அவரிடமும் பேச முடியவில்லை :-(

நமது காமிக்ஸ் தளத்தில் பதிவிடாமல் தொடர்ந்து படித்துவரும் மவுன பார்வையாளர்கள் பலரை சந்திக்க நமது புத்தக ஸ்டாலில் முடிந்தது, அவர்கள் சொல்லும் காரணம், "என்ன சார் இந்த மாதிரி சண்டை போடுறாங்க, வெட்டு குத்து நடக்குது, நமக்கு எதுக்கு வம்பு அதனால எதுவும் நம்ப தளத்தில் பதிவு இடுவதில்லை" என சொன்ன போது மனது வருத்தபட்டது. அவர்களிடன் நீங்கள் அதை பற்றி கவலைபடாமல் உங்கள் மனதில் உள்ளதை எழுதி விட்டு செல்லுங்கள்; இது நமது காமிக்ஸ் தொடர்ந்து சிறப்பாக வெளி வர உதவும் என்றேன்.

கடந்த இரண்டு வருடம்களாக செல்ல முடியாத ஈரோடு புத்தக திருவிழாவிற்கு இந்த முறை செல்ல, வாய்பு ஏற்படுத்தி தந்த எனது குடும்பத்திற்கு நன்றி :-). 

2 comments:

  1. முகநூலில் நண்பர்களாக இருக்கும், முகம் தெரியாத பல நண்பர்களின் போட்டோக்களை காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
    இந்த போட்டோக்களில் உங்களை அடையாளம் காண்பது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. in the fourth photo I am standing in the middle, with blue color shirt!

      Delete