பெங்களூர்: கடந்த சில
மாதம்களுக்கு முன் காலையில் எனது அலுவலகம் செல்லும் போது ITPL
அருகே உள்ள ஹூடி சந்திப்பில் உள்ள சிக்னலில் வாகன
போக்குவரத்து அதிகமாக இருந்தது. நான் செல்லும் திசையில் மிக பெரிய வரிசையில் வாகனங்கள்
இருந்தன. அதே திசையில் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளி ஒருவரை அவசரமாக மருத்துவமனை
எடுத்து செல்ல வழக்கம் போல் சத்தம் இட்டு கொண்டு இருந்தது.
நானும் வழக்கம் போல்
பாவம்டா இந்த நோயாளி இந்த மக்கள் என்னிக்கி வழிவிட்டு இவரை எப்படி காப்பாத்த
போன்றனுகளோன்னு நொந்து கொண்டு நின்றேன்.
ஆம்புலன்ஸ் முன்னால்
இருந்த வாகனகள் தீடிர் என சிக்னல் விளக்கு பச்சைக்கு மாறுவதற்குள் அவைகள் வேகமாக
நகர ஆரம்பித்தன, சரி மக்கள் ஆம்புலன்ஸ் பேர சொல்லி வழக்கம் போல் சிக்னல் ஜம்ப் பண்ண
போறாங்க அப்படின்னு நினைத்தால் எல்லா வாகனம்களும் முன்னால் சென்று ஒரு ஓரமாக
நின்று கொண்டு ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்டு நின்றன! சக வாகனம்களின் இந்த செயலால் ஆம்புலன்ஸ்
அந்த சிக்னலை விரைத்து கடந்து சென்றது.
பெங்களூர்-ல் பொதுவாக
ஆம்புலன்ஸ்/தீ அணைப்பு வண்டி போன்றவை அவசரமாக செல்ல வேண்டும் என்றால் சக வாகன ஓட்டிகள் அதனை கண்டு கொள்ளவதில்லை, அதில் உயிருக்கு
போராடி கொண்டு இருக்கும் நோயாளிகளை ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை; தான்
விரைந்து செல்வது தான் முக்கியம் என நான் புரிந்து கொண்ட விஷயம். ஆனால் இந்த
சம்பவம் உயிர்க்கு நமது மக்கள் மதிப்பு கொடுக்க ஆரம்பித்து விட்டதை பறைசாற்றியது. என்னை
பொறுத்தவரை இது போன்ற மாற்றம்கள் நமது நாட்டிற்கு கண்டிப்பாக தேவை.
இந்த நிகழ்வு என்னை
அறியாமல் கைதட்டி அந்த வாகன ஓட்டிகளை பாராட்டிய போது கண்களில் ததும்பிய ஆனந்த
கண்ணீரை மறைக்க முடியவில்லை.
No comments:
Post a Comment