பெங்களூர் பிரசன்னாவின் பார்வையில்:
காமிக்கான் 2012-ல் முதன்முதலாக பெங்களூர் வந்தபோது நமது லயன்/முத்து ஸ்டால் போட்டார்கள், அது நடந்தது கோரமங்களவிலுள்ள இண்டோர் ஸ்டேடியத்தில். மறுபடியும் 2013-ல் அதே இடம் (இலவச அனுமதி இந்த இரு வருடங்களுக்கு இருந்தது)
அதன் பிறகு, நடைபெறும் இடத்தை மாற்றி, கட்டணம் கொடுத்தால் தான் அனுமதி என்று செய்துவிட்டார்கள்.
முதல் இரு வருடங்களும் நமது ஸ்டாலுக்கென வந்த நண்பர்கள்தான்..
லயன் ப்ளாக் அறிமுகமாகி மெல்ல மெல்ல பிரபலமடைந்த நேரம்.. அப்போதுதான் ப்ளாகில் எழுதும் பல நண்பர்களை நேராக கண்டுகொண்டு.. "ஓ.. ப்ளாகில் அந்த பேர்ல எழுதுறது நீங்கதானா..?" என்று ஒரு ஜாலியான அறிமுகம் மற்றும் அரட்டை நடந்தேறியது..
பிறகு, 2013-ல் சினிபூக்கின் பிரதான ஆங்கில மொழிபெயர்ப்பாளர் காமிக் கான் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.. அவரை நம் ஸ்டாலுக்கு வரவைத்து, நம் புத்தகங்களை அவரிடம் காண்பித்து நண்பர்கள் சிலரோடு பேசியது என பொழுது போனது..!
But, அதிகபட்சம், அங்கே அமர் சித்ரா கதா ஸ்டால் மற்றும் காம்ப்பயர் காமிக்ஸின் ஸ்டால்கள் இருக்கும், அதை வேண்டுமானால் பார்த்துவிட்டு வரலாம். அவ்வளவே. மற்றபடி காமிக்கானில் புத்தகம் என்ற சமாச்சாரம் மிக மிக குறைவே. அவர்கள் டீ ஷர்ட், மக், போஸ்டர்ஸ் என பல்வேறு காமிக் கதாபாத்திரங்களின் மூலமாக சந்தைப்படுத்துவதே அதிகம். பிறகு, காமிக் கதாபாத்திரங்களை போல வேஷம் போட்டு பலர் சுற்றிச்சுற்றி வருவார்கள் (cosplay), அதில் சிறப்பாக தோற்றமளிக்கும் சிலருக்கு பரிசு கொடுப்பார்கள். அவ்வளவே.. நண்பர் ஸ்ரீராம் லக்ஷ்மன் டெக்ஸ் வில்லர் வேடம் அணிந்து (மஞ்சள் சட்டை, துப்பாக்கி, தொப்பி சகிதம்) வந்தார்..! அந்த கெட் அப்பில், அங்கே வந்திருந்த பரணி அவர்களின் குழந்தையிடம் ஸ்டைல் காட்டி, அந்த குழந்தை பயந்து அழுதது தனிக்கதை!
புகைப்படங்கள்: