எனது வாழ்வில் தாத்தாவின் அருகாமையை உணர்த்து இல்லை!
ஆனால்...
எனது ஆச்சி (பாட்டி) யை பார்த்து இருக்கிறேன், சிறுவயதில்! ஆனால் நான் 3-4 வகுப்பு படிக்கும் போது விடுமுறைக்கு விருதுநகர் செல்லுவோம், அவர்கள் அவ்வளவாக நடமாடுவது கிடையாது; கட்டிலில் உட்கார்ந்து பேரப்பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என வேடிக்கை பார்ப்பது மட்டும் ஏதாவது தவறு செய்தால், "ஏய் அந்த குரங்கு படிக்கட்டில் ஏறி விளையாடுகிறான்டி" என சொல்லுவார்கள்! பெரியதாக ஈடுபாடு கிடையாது அவர்கள் மேல், அறியாத வயதில் நமது நன்மைக்குத்தான் அவர்கள் இதனை சொல்லுகிறார்கள் என புரியாத காரணத்தால்!
வருமானம் இல்லாமல் தூத்துக்குடியில் எனது குடும்பம் கஷ்டபட்ட போது விருதுநகரில் இருந்து ஆச்சி
எங்கள் வீட்டுக்கு வரும்போது ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்கி கொண்டு வருவார்கள்! அவர்கள் கொண்டு வந்த பொருள்கள் வீட்டில் உள்ள கயிற்று கட்டில் கீழ் பரப்பி வைத்து இருப்பார்களாம், எனது அய்யா (அப்பா) மதியம் சாப்பிட வீட்டுக்கு வரும்போது கட்டில் கீழ் மளிகை பொருள்கள் இருந்தாள் தனது மாமியார் வந்து இருக்கிறார், குழந்தைகள் சாப்பாட்டுக்கு அடுத்து சில வாரங்கள் பிரச்சினை இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விடுவேன் என எனது அய்யா பலமுறை நான் வளர்ந்த பிறகு சொல்லி பெருமை பட்டு இருக்கிறார்கள்! எனது ஆச்சி வர முடியவில்லை என்றால் விருதுநகரில் இருந்து தூத்துக்குடி வரும் யாரிடமாவது மளிகை பொருள்களை கொடுத்து விடுவது பல முறை நடந்து உள்ளது. அதே போல் எனது முத்த அக்கா திருமணத்திற்கு தேவையான நகையை கொடுத்து நடைவைத்தவர் அவர் என எனது தாய் தந்தை சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்!
இந்த பதிவு எனது ஆச்சி தனது மகளின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்ததை நினைவு கூறவே!!